கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று
தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில்
ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை
காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் மாகாண அரசை அமைக்க முடியும்.
ஆனால்,அரசுடன் சேர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு சாரார் கடும்
எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் இதுகுறித்து நேற்று நள்ளிரவு வரை தீர்க்கமான
முடிவு எதனையும் எடுக்கமுடியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இருந்தது.
இந்த நிலையில் கிழக்கில் தேசிய அரசு
ஒன்றை அமைப்பதற்கான சமிக்ஞைகள் அரசிடம் இருந்து தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. சர்வதேச
நாடுகள் பலவற்றின் அழுத்தங்களைத் தொடர்ந்தே அரசு, கிழக்கில் தேசிய அரசை
அமைக்கும் நிலையை நோக்கி நகர்வதாக கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிட
விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக