செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மத்திய அரசுக்கு ஆதரவு விலகல் : மமதா அறிவிப்பு



இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.


டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த முடிவை செய்தியாளர்களிடம் அறிவிததார்.
ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கும் நிலையி்ல், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போதுள்ள மத்திய அரசு 3 அல்லது 6 மாதங்களுக்குத்தான் நீடிக்கும் என்று கூறிய மமதா பானர்ஜி, தலை துண்டிக்கப்படும்போது அந்த அரசில் தொடர்வது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.


வெள்ளிக்கிழமை ராஜிநாமா
அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பிரதமரிடம் ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு எந்த முடிவு குறித்தும் தங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும், துளி கூட மரியாதை இ்ல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த பிரச்சினையை திசை திருப்புவதற்குத்தாநன் அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இ்ந்தியாவில் 50 பில்லியின் ம்ககள் அமைப்புசாரா தொழிலில் , சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்கள் கதி என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர அரசு தயங்குவது ஏன் என்று மமதா கேள்வி எழுப்பினார்.
ஒரு கட்சி ஆதரவளிக்காவிட்டால், இன்னொரு கட்சி ஆதரவு என்று காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்ற அவர், அந்தக் கட்சி பிளாக்மெயில் அரசியல் நடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், ரயில்வே அமைச்சகத்தை இழந்ததைப் பற்றி்க் கவலைப்படவில்லை என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: